
இசுடுட்கார்ட்
இசுடுட்கார்ட் அல்லது ஸ்சுட்கார்ட் என்னும் நகரம் டாய்ட்ச் நாட்டின் தென் புறத்தில் உள்ள பாடன் - வியூர்ட்டம்பெர்க் என்னும் மாநிலத்தின் தலைநகராகும். இது டாய்ட்ச் நாட்டின் 6 ஆவது மிகப்பெரிய நகரம். இந் நகரத்தின் மக்கள் தொகை 595,452, ஆனால் புறநகரப் பகுதிகளையும் சேர்த்துக்கொண்டால் மக்கள் தொகை 2.67 மில்லியன் ஆகும்.